fbpx

வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்..!! ஷாப்பிங் வசதிகள் அறிமுகம்..!!

வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது, வாட்ஸ்அப் பிசினஸுக்கான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் ஃப்ளோஸ், ரேஸர்பே மற்றும் பேயுவுடன் இணைந்த வேகமான கட்டண முறை மற்றும் வணிகர்களுக்கான மெட்டா வெரிஃபைட் போன்றவை அடங்கும்.

வாட்ஸ்அப் மூலமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் இருந்து பணம் செலுத்தும் அம்சமானது ஏற்கனவே உள்ளது. அதை இன்னும் மேம்படுத்தும் விதமாக, வாட்ஸ்அப்பில் ஷாப்பிங் செய்து அதற்கான பணத்தை வாட்ஸ்அப் மூலமாகவே செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ பயன்பாடுகள் மூலமாக, மெசேஜில் பணம் செலுத்த முடியும். இதனால் நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

வாட்ஸ்அப் பிசினஸில் வணிகர்களுக்காக மெட்டா வெரிஃபைட் பேட்ஜ் ஆனது அறிமுகமாகவுள்ளது. இதனால் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் வணிகர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா அல்லது ஆள்மாறாட்டம் செய்கிறாரா என்பதை அறிந்து கொள்ள முடியும். மெட்டா வெரிஃபைட் ஆனது தனிப்பயன் கொண்ட வாட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கும் திறன் உள்ளிட்ட கூடுதல் பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.

அதோடு ஆர்வமுள்ள பயனர்கள் உங்களது வணிகத்தை இணையத்தில் தேடும்போது எளிதாகக் கண்டறிய முடியும். பல சாதனத்தில் உங்கள் கணக்கை வைத்திருப்பதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியும். இந்த மெட்டா வெரிஃபைட் பெற்ற வணிகர்கள் தங்களது கணக்கை 10 சாதனங்களில் வைத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் பிசினஸ் செயலியைப் பயன்படுத்தி சிறு வணிகர்களுடன் கூடிய விரைவில் மெட்டா வெரிஃபைட் சோதனையைத் தொடங்க உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் உள்ள வணிகர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

தனியார் பள்ளிகளில் சேர ஆதார் எண் கட்டாயம் கிடையாது...! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Fri Sep 22 , 2023
பொருளாதாரத்தில் நலிவடைந்த EWS, DG, CWSN மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒரு தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் சேருவதற்கு குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயம் இல்லை என்ற டெல்லி அரசாங்கத்தின் முடிவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இடைக்கால உத்தரவை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்ததோடு, தனியுரிமை […]

You May Like