fbpx

அழிவின் அபாயத்தில் உயரினங்கள்!… நகர தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!… விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பணிப்பாறை சிறிது சிறிதாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் சுமார் 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள A23-a என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட 3 மடங்கு பெரியதாகும். இந்த அளவுக்கு பெரிய அளவிலான பனிப்பாறை நகர்தலை பார்ப்பது அரிது என்று தெரிவித்துள்ள பிரிட்டனை சேர்ந்த அன்டார்டிக் பனிப்பாறை நிபுணர் டாக்டர்.ஆலிவர்மார்ஷ், விஞ்ஞானிகள் ராட்சத பனிப்பாறையை துல்லியமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள இந்த பனிப்பாறையை நகர்த்தும்போது, அதனை பார்ப்பது அரிது. தற்போதைய நிலையில் A23-a பனிப்பாறை மெதுவாக தெற்கு பெருங்கடலை நோக்கி நகர்வது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இந்த ராட்சத பாறை சற்று ஆவியாகி உள்ளததால், எடை குறைந்து காற்று மற்றும் கடல் நீரோட்டம் குறைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்கிறது. A23a பாறை தெற்கு ஜார்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த தீவினை இந்த பனிப்பாறை சென்றால்,, அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

Kokila

Next Post

சற்று முன் வெளியான அறிவிப்பு...! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது...!

Mon Nov 27 , 2023
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌ மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]

You May Like