fbpx

மாணவர்களை கார் இடித்துத் தள்ளும் வீடியோ வைரல்….

காசியாபாத்தில்  வேகமாக வந்த கார் மாணவர்களை இடித்து தூக்கி வீசும் பயங்கரமான காட்சிகள் வைரலாகி வருகின்றது ..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது சாலையில் எதிரே கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து சில மாணவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

சில மாணவர்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டு கார் வருவதை கவனிக்காமல் சண்டையிட்டுக் கொண்டே வருகின்றனர். அல்லது அவர்கள் அந்த கார் ஒதுங்கிச் சென்றுவிடும் என நினைத்திருக்கலாம். ஆனால் கார் வேகமாக வந்து இருவர் மீதும் மோதியது. இதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

விபத்தை ஏற்படுத்திய காரை மாணவர்கள் பிடித்து வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து காசியாபாத் போலீசார் கூறுகையில் , ’’ மாணவர்கள் மீது கார் ஏற்றிய நபருக்கு கட்டாயம் உரிய தண்டனை கிடைக்கும். மேலும் தகராறில் ஈடுபட்ட மாணவர்களையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. எதற்காக தகராறு நடந்தது என விசாரணை நடத்தி பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Post

சீனாவில் ஊழல் குற்றம் புரிந்த நிதி அமைச்சருக்கு மரண தண்டனை..!

Thu Sep 22 , 2022
சீனாவில் நிதி பிரிவு தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில், பல உயர்மட்ட அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி, நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர் உள்ளனர். சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் ஃபூ ஜெங்குவா. அவர் தனது பதவி காலத்தில் அதிகார […]

You May Like