fbpx

பெண்ணின் தோல் மூலம் விந்தணு!… ஆணின் தோல் மூலம் கருமுட்டை!… வியப்பூட்டும் புதிய டெக்னாலஜி!

மனித உடலுக்கு வெளியே கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களை உருவாக்கும் புதிய டெக்னாலஜி விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன் விட்ரோ கேமடோஜெனெசிஸ்” (In Vitro Gametogenesis)எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி மனித தோல் செல்களை கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களாக மாற்றும் ஒரு புதுவித டெக்னாலஜி விரைவில் சாத்தியமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் மனித உடலுக்கு வெளியே கரு முட்டைகள் மற்றும் விந்தணுக்களை உருவாக்கமுடியும் என்று கருதப்படுகிறது.

இந்த புதிய கோட்பாட்டில், ஆணின் தோலில் உள்ள செல் கருமுட்டையாகவும், பெண்ணின் தோலில் உள்ள செல் விந்தணுவாகவும் மாறலாம். ஒரு குழந்தைக்கு பல மரபணு தொடர்பான பெற்றோர்கள் அல்லது ஒருவரை மட்டுமே கொண்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும் சில விஞ்ஞானிகள் இந்த இன் விட்ரோ கேமடோஜெனீசிஸின் மனித பயன்பாடுகள் செயலாக்கம் பெற வெகு காலம் ஆகும் என்று கூறுகின்றனர். இருப்பினும், மனித ஸ்டெம் செல்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், அதில் உள்ள தடைகளை கடப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். புதிய பயோடெக்னாலஜி ஸ்டார்ட்-அப்களும் இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க முயல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா?… சூனியத்தின் தாக்கத்தில் இருப்பதற்கான சாட்சி!

Mon Dec 18 , 2023
இன்றைய காலத்தில் உலகம் எவ்வளவுதான் டிஜிட்டல்மயமாகிவிட்டாலும் ஆன்மிகம், பேய்கள், பில்லி, சூனியம்-ஏவல் போன்ற விஷயங்கள் குறித்த மர்மங்களும் உலாவி வருகின்றன. இதில் ஏலியன் இருக்கிறதா என்ற தகராறு வேறு ஏற்படுகிறது. நம் முன்னோர்கள் பில்லி சூனிய விஷியத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனை விரட்டியடிக்க வீட்டு வாசலில் கண்ணாடி வைப்பது, துஷ்ட தேவதை வீட்டிற்கு வந்தாலும் விரட்டிவிடும். கருவண்டு வீட்டை சுற்றினால், செய்வினை வரப்போகிறது என அர்த்தம். கருவண்டு வீட்டிற்குள் வந்துவிட்டால் […]

You May Like