அவசரமான கால சூழ்நிலையில், மனிதர்கள் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் ரெஸ்ட் என்பது கூட பலருக்கு கனவாக மட்டும் தான் உள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும் இல்லை, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் வீட்டில் ஓடிக்கொண்டே தான் இருக்கீறார்கள். இப்படி நாள் முழுவதும் ரெஸ்ட் இல்லாமல் ஓடுபவர்களின் உடலுக்கு புரதம் மற்றும் அனிமோ ஆசிட்ஸ் ஆகியவை தேவையான அளவில் கட்டாயம் கிடைக்க வேண்டும்.
அதிக அளவில் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த பயனும் இருக்காது. மாறாக எடை அதிரித்து பல பிரச்சனைகள் தான் ஏற்படும். இதனால், நாம் குறைவாக சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது பலருக்கு தெரிந்த உண்மையாக இருக்கலாம். ஆனால், பலரால் அதிக விலை கொடுத்து பழங்கள், காய்கறிகளை வாங்க முடியாது. ஒரு வேலை காய்கறிகளை வாங்கினாலும், பழங்களை வாங்குவது அனாவசிய செலவாகத்தான் பலர் பார்கின்றனர்.
இதற்கு காரணம், பழங்களின் விலை தான். ஒரு கிலோ ஆப்பிள் வாங்கும் பணத்திற்கு 2 வாரத்திற்கு தேவையான மளிகை பொருள்களை வாங்கி விடுவேன் என்று சொல்பவர்கள் அநேகர். அதுவும் பெரிய குடும்பமாக இருந்தால் 1 கிலோ ஆப்பிள் கூட பத்தாது. இனி நீங்கள் இதை பற்றி கவலை பட வேண்டாம். 100 ஆப்பிள்களின் சத்து கொண்ட ஒரு பொருள் ஒன்று உள்ளது. அந்தப் பொருளில் 50 லிட்டர் பசும்பாலில் இருக்கக் கூடிய சத்துகளும் கிடைக்கும். அந்த அற்புதமான உணவை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
ஸ்பைருலினா என்று அழைக்கப்படக் கூடிய Blue Green Algae தான் அது. இதில் ஏராளமான சத்துகள் உள்ளதாக மருத்துவர் அமுதா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “பெட்ரோல் எப்படி கார், பைக் ஆகியவற்றுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு, மனிதன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு அமினோ ஆசிஸ் தேவைப்படுகிறது. இத்தனை முக்கியமான அமினோ ஆசிட்ஸ், கீரை வகையைச் சேர்ந்த இந்த ஸ்பைருலினாவில் அதிகம் நிறைந்துள்ளது.
ஒரு காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே பிரபலமாக கிடைத்த இந்த வகை கீரைகள், நல்ல தண்ணீரில் விளையக் கூடியது. ஆனால், இந்த கீரைகள் தற்போது இந்தியாவிலும் அதிகமாகவே கிடைக்கிறது. எனவே, சோர்வின்று சுறுசுறுப்பாக நாள் முழுவதும் பணியாற்ற, ஸ்பைருலினாவில் இருந்து அதிகப்படியான அமினோ ஆசிட்ஸை பெறலாம் என மருத்துவர் அமுதா குறிப்பிட்டுள்ளார். இந்த கீரை கிடைக்காத பட்சத்தில், இவற்றை பொடியாகவும், மருந்து வடிவத்திலும் சந்தையில் கிடைக்கும்.
Read more: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!