fbpx

ஆன்மிக நிகழ்ச்சி..!! கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு..!! உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு..!!

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் அமைந்துள்ளது ரதி பன்பூர் எனும் கிராமம். சில செய்தி நிறுவனங்கள் முகல்கர்ஹி கிராமம் என்றும் கூறுகின்றன. இங்கு மதபோதகர் ஒருவரின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக போடப்பட்ட கூடாரத்தில் மக்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 107 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி எட்டா சிங் கூறுகையில், ”இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள், 1 நபர் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டுள்ளது. சிறு காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகிறது” என்றார்.

கூட்ட நெரிசல் காரணமாகவே இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சிக்கந்தரா ராவ் காவல்நிலைய அதிகாரியும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய தகவலின்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொண்டவர் கூறுகையில், ”மதநிகழ்வு முடிவடைந்ததும் நெரிசல் ஏற்பட்டது. ஏராளமானோர் திரண்டு இருந்த நிலையில், வெளியேற வழி இல்லை. ஒருவர் மீது ஒருவர் விழுந்த நிலையில், நெரிசல் ஏற்பட்டது. ஒரு சிலர் மயக்கமடைந்தனர். சிலர் இறந்துவிட்டனர்” என தெரிவித்தார்.

Read More : ”முதலில் தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்லுங்க”..!! திருமாவளவனின் கேள்வியால் கொந்தளித்த நிர்மலா சீதாராமன்..!!

English Summary

107 people lost their lives in a stampede at a spiritual event in Uttar Pradesh

Chella

Next Post

ஜம்மு, காஷ்மீரில் வாக்கெடுப்பு கேட்பது இந்த பிரிவுகளின் கீழ் குற்றம்..! UAPA தீர்ப்பாயம் விதிகள் கூறுவது என்ன..?

Tue Jul 2 , 2024
UAPA தீர்ப்பாயம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு கோருவது அல்லது ‘சுய நிர்ணய உரிமை’க்காக வாதிடுவது பிரிவினைவாத நடவடிக்கை என்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது. பயங்கரவாதி மஸ்ரத் ஆலமின் அமைப்பு, முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸ்ரத் ஆலம் பிரிவு) மீதான தடையை உறுதி செய்து UAPA தீர்ப்பாயம் ஜூன் 22 அன்று 148 பக்க தீர்ப்பில் கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் […]

You May Like