fbpx

மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்‌ தமிழக அரசு சார்பில் ஆன்மீக சுற்றுலா…! வெறும் ரூ.900 கட்டணம்… ஒரு நாள் சுற்றி பார்க்கலாம்…!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்‌ தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்‌ கழகம்‌ மற்றும்‌ இந்து சமய அறநிலையத்துறையும்‌ இணைந்து ஆன்மிக பயணிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சென்னை, மதுரை, திருச்சி மற்றும்‌ தஞ்சாவூர்‌ ஆகிய நகரங்களில்‌ உள்ள பிரசித்தி பெற்ற அம்மன்‌ திருக்கோயில்களை தரிசனம்‌ செய்யும்‌ வகையில்‌ காலை 8.30 மணி முதல்‌ இரவு 8.30 மணி வரை ஒரு நாள்‌ ஆடி அம்மன்‌ தொகுப்பு சுற்றலா 17.07.2022 அன்று முதல்‌ அறிமுகப்படுத்தியுள்ளது.

மதுரை, ஓட்டல்‌ தமிழ்நாடு, அழகர்கோயில்‌ சாலையிலிருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன்‌ திருக்கோவில்‌, மதுரை-அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவில்‌, வண்டியூர்‌- அருள்மிகு காளியம்மன்‌ திருக்கோவில்‌, மடப்புரம்‌-அருள்மிகு வெட்டுடையார்‌ காளியம்மன்‌ திருக்கோவில்‌, விட்டனேரி- அருள்மிகு முத்து மாரியம்மன்‌ திருக்கோவில்‌, தாயமங்கலம்‌- அருள்மிகு ராக்காயி அம்மன்‌ திருக்கோவில்‌, அழகர்‌ கோவில்‌ , ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம்‌ செய்து வரும்வகையில்‌ சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, இச்சுற்றுலாவில்‌ பயணிக்கும்‌ அனைவருக்கும்‌ மதிய உணவு அனைத்து கோவில்களிகலும்‌ பிரசாதம்‌ மற்றும்‌ சிறப்பு விரைவு தரிசம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம்‌ ரூ.900 எனவே சுற்றுலா பயணிகள்‌ ஆன்மீக அன்பர்கள்‌ இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு http://www.ttdconline.com/ என்ற இணையத்தில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, விவரங்களுக்கு 9176995841, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

‌Also Read: அதிகரிக்கும் கொரோனா… இந்த 9 மாநில அரசு மட்டும் Influenza போன்ற நோய் குறித்து உடனே அறிக்கை அனுப்ப உத்தரவு…!

Vignesh

Next Post

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல்... ஆன்லைன் மூலம் மட்டுமே....! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு...!

Fri Jul 22 , 2022
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப்பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப்பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அறிவியியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள […]

You May Like