அழையா விருந்தாளியாக எப்போதும் வீட்டில் இருப்பவர்கள் தான் கரப்பான் பூச்சிகளும், பள்ளிகளும். இவைகள் நம்மை கடிப்பது இல்லை என்றாலும், உணவுகளில் அல்லது தண்ணீரில் இவைகள் விழுந்து விட்டால் பெரும் பிரச்சனை தான். இதனால், முடிந்த வரை இவைகளை வராமல் தடுப்பது நல்லது. பலர் இவைகள் வராமல் தடுக்க கெமிக்கல் ஏதாவது ஒன்றை வைப்பது உண்டு. ஆனால் இது ஆபத்து தான். குழந்தைகள் இருக்கும் வீடுகளில், இந்த தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்.
தங்கள் வீடுகளில் கரப்பான், பல்லி மற்றும் எரும்பு தொல்லையை அதிகமாக எதிர்கொள்பவர்கள் இந்த டிப்சை பயன்படுத்தி அவற்றை வீட்டிற்கு வராமல் தடுக்கலாம். இதற்கு ஒரு ஷேம்பு பாக்கெட் இருந்தால் போதும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு பாக்கெட் ஷேம்புவை ஊற்றிக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு மூடி டெட்டாலை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். மேலும், இந்த கலவையில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்குங்கள்.
இப்போது இந்த கலவையில், 2 மூடி வினிகரை கலந்து, அரை டம்பளர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும். இந்த கலவையை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் ஊற்றி, கதவு ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்பிரே செய்தால் போதும். கரப்பான், பல்லி, எரும்பு போன்ற எதுவும் வீட்டிற்க்குள் வராது. ஒரு நாளைக்கு 2 முறை என ஒரு வாரம் இவ்வாறு செய்தால் போதும். எந்த பூச்சி தொல்லையும் இருக்காது. எதாவது ஒரு இடத்தில, கரப்பான், உள்ளிட்ட பூச்சிகள் அதிகமாக இருந்தால், ஒரு டிஸ்யூ பேப்பரில், இந்த லிக்யூடை ஸ்பிரே செய்து, அந்த பேப்பரை, அந்த இடத்தில் வைத்துவிடலாம்.
Read more: அழுக்கான உங்கள் பழைய டீ வடிகட்டியை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ சட்டுன்னு இதை செய்யுங்க..