fbpx

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள்!… ஜூன் 13-ம் தேதி தொடக்கம்!…உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போட்டிகள் ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், “ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் தமிழகத்தின் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழக விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேஷியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியை நடத்த 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியையும் இடம் பெறச்செய்யும் முயற்சிவும் இது இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, இந்தப் போட்டிகளைக் காண்பது என்பது பொதுமக்களுக்கும் ஸ்குவாஷ் விளையாட்டு ரசிகர்களுக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும். நம்முடைய அரசு இதுபோன்று சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ‘ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றும் அவர் கூறி உள்ளார்.

Kokila

Next Post

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சர்!... அடிடாஸ்(adidas) நிறுவனம் !

Tue May 23 , 2023
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆகியுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அணியின் ஜெர்சியில் மேல் புறத்தில் அடிடாஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும். அடிடாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் தொகை என்னவென்று குறிப்பிடவில்லை. அடிடாஸ் அடுத்த மாதம் முதல் […]

You May Like