SRH vs DC: நடப்பு ஐபிஎல் தொடரின் 35 வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH vs DC) அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்கள்.
அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் மூன்றாவது ஓவர் இல்லையே தனது அரை சதத்தை 16 பந்துகளில் நிறைவு செய்தார். மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
இவர்கள் இருவரது அதிரடி தாக்குதலால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாதனையை 7 வருடங்களுக்கு பிறகு முறியடித்து இருக்கிறது.
2017 ஆம் வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது ஐபிஎல் போட்டியில் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது முறியடித்து இருக்கிறது.
மேலும் மற்றொரு சாதனையாக முதல் 10பவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் அணி இன்று படைத்துள்ளது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் முதல் 10பவர்களில் 158 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் முதல் 10பவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.
தற்போது வரை ஹைதராபாத் அணி 11.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவஸ் ஹெட் மிகச் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் .