fbpx

இலங்கை கடற்படையின் தொடரும் அராஜகம்… கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள்.!

தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. தற்போது மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக மீனவர்கள் பருத்தித் துறை கடற் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரையும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் அத்துமீறி கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்ற நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி அவர்களது உறவினர்கள் தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் அராஜகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு விரைவிலேயே சரியான ஒரு தீர்வு வேண்டும் என மீனவர்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Kathir

Next Post

11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Sat Nov 18 , 2023
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (17-11-2023) பிற்பகல் வங்கதேசம் கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையை கடந்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக […]

You May Like