fbpx

TN Fishermen Arrest: தொடரும் அவலம்..! மீண்டும் தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…!

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10ம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும், 15ம் தேதி 15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 21 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். ஏற்கெனவே, 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

earthquake: அதிகாலையில் குலுங்கிய பூமி!… அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!… அச்சத்தில் மக்கள்!

Thu Mar 21 , 2024
earthquake: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்குள் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதாவது […]

You May Like