கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை விசைப்படகுடன் சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.
ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை கடந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 13 மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.