fbpx

பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்..? சர்ச்சையை கிளப்பிய ஹெச்.ராஜா..!!

ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த கோஷம் ஒன்றும் ஆட்சேபகரமானது அல்ல என்றும், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும் என ஹெச்.ராஜா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது. இந்நிலையில், இந்த போட்டியில் ஆட்டமிழந்த ரிஸ்வான், பெவிலியன் திரும்பியபோது அங்கு திரண்டிருந்த இந்திய அணி ரசிகர்கள், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றும், விளையாட்டு என்பது வெறுப்பை பரப்பும் கருவியாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பாக எழுந்து வரும் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில் திமுகவினரை கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ’’பாரத நாட்டின் அரசியலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் ஸ்ரீராமரின் படம் உள்ளது. இன்றும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக உள்ளது. ஆகவே, ஜெய்ஸ்ரீராம் கோஷம் ஆட்சேபகரமானது அல்ல. மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமர், நம் நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்? என பதிவிட்டுள்ளார். இந்த சர்ச்சை பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

வயதுக்கு வந்ததும் தனியாக செல்லும் விலங்குகள்!… பெண் விலங்குகளின் தலைமை பண்புகள் எப்படி இருக்கும் தெரியுமா?

Tue Oct 17 , 2023
விலங்கினங்கள் சிலவற்றில், பெண் விலங்குகள் அபார தலைமைப் பண்பை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, கழுதைப்புலி, யானை, சிங்கம் ஆகியவற்றில் பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக உள்ளன. உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ளலாம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் […]

You May Like