சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2023-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சட்டபூர்வ அமைப்புகள் ஆகியவற்றில் சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்காக கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வுகளை ஆணையம் நடத்தவுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம் போன்றவை ஆள்சேர்ப்புக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் கடைசி நாள் 23.08.2023 ஆகும்.
தென்மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு 2023 அக்டோபரில் 15 மையங்களில் நடைபெறும். இவற்றில் தமிழ்நாட்டில் 6 மையங்களும், புதுச்சேரியில் 1 மையமும், ஆந்திரப் பிரதேசத்தில் 6 மையங்களும், தெலங்கானாவில் 2 மையங்களும் இருக்கும்.