fbpx

அதிகாரப்பூர்வ அறிவிப்பு…! SSC தேர்வுக்கு ஏப்ரல் 1, 2023 முதல் விண்ணப்பிக்கலாம்….! முழு விவரம் இதோ…!

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான பதிவு செயல்முறையை ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 1, 2023 ஆகும். இந்த ஆண்டு, SSC CGL 2023 தேர்வை ஜூன் மற்றும் ஜூலை 2023 இல் ஆணையம் நடத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆணையம் தனது ட்விட்டரில், “SSC- CGL 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 1 ஏப்ரல் 2023 அன்று தொடங்கும், தேர்வர்கள் 1 மே 2023 வரை விண்ணப்பிக்கலாம். அதன் ஆன்லைன் தேர்வு ஜூன், ஜூலை 2023 இல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

SSC CGL தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது..?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ஐ பார்வையிடவும். பின்னர் முகப்புப் பக்கத்தில், பதிவு என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். அடுத்து போர்ட்டலில் உள்நுழைந்து பதவிக்கு விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும். இறுதியில் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! முன்னாள் அமைச்சர் உடல் நலக்குறைவால் காலமானார்...! முதல்வர் இரங்கல்...!

Sun Jan 15 , 2023
இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் காலமானார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் கர்சோக் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் அமைச்சருமான மான்சா ராம் (82) காலமானார். இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் ஆபத்தான நிலையைக் கண்ட […]

You May Like