மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
28 மற்றும் 30 ஆகிய நாட்களில் 4 பிரிவுகளாக இத்தேர்வு நடைபெறும். இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் எனப்படும் மின் அனுமதி சான்றுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் அனுமதி சான்றிதழ்களும், உரிய அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுதிக்கப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு தென் மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணான 044-28251139 மற்றும் கைபேசி எண் 9445195946 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்