ஜம்மு காஷ்மீரில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு நடனக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் பிஷன்னா பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் மாறுவேடமிட்டு நடனமாடியுள்ளார். பார்வதியாக வேடமிட்டு நடமாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆடிக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் அதை நடனத்தின் ஒரு பகுதி என்றே நினைத்துள்ளனர். நீண்ட நேரமாக எழுந்திரிக்காததால் சிறிது நேரம் கழித்தே சக நடனக் கலைஞர்கள் சென்று அவரை தட்டி எழுப்பி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக முயற்சித்தும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் அதிர்ந்து போனார்கள். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.