பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்தார். கடந்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை வந்தடைந்தார் முதலமைசர் முக.ஸ்டாலின். அவரை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.