fbpx

ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது..! INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்..! டிடிவி தினகரன் கேள்வி…!

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிஜாக கூட்டணியில் உள்ள அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனீ தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்றைய தினம் ஆண்டிபட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாபோது பேசிய அவர், “தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு தலை இருக்கிறது, அந்த தலை உலக புகழ் பெற்ற மோடி அவர்கள், ஆனால் திமுக இருக்கிற கூட்டணிக்கு யாரு பிரதமர் வேட்பாளர்..? ஸ்டாலினா.., அவர் என்றால் அடுத்த ஸ்டேட்ல கூட விடமாட்டாங்க, இது எதோ போதை மருந்தோட வரப்போறாங்க என்று. மோடி அவர்கள் ஒரு மணி நேரம் ஆனாலும் பேசக்கூடியவர், ஆனா நம்மாளு, சின்ன துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியாது. திமுகவும் பழனிசாமியும் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்கள்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

Also Read: ‘கல்லை காட்டும் உதயநிதி’..!! ‘பல்லை காட்டும் எடப்பாடி’..!! தேர்தல் பிரச்சாரத்தில் மாறி மாறி தாக்கு..!!

Kathir

Next Post

EPFO: ஜனவரி மாதத்தில் 16.02 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை ...!

Tue Mar 26 , 2024
இபிஎப்ஓ ஜனவரி மாதத்தில் 16.02 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது. ஜனவரியில் சுமார் 8.08 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஊதியத் தரவு சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும், இது ஜனவரியில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 56.41% ஆகும், இது ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் தொகுப்பில் சேரும் பெரும்பாலான நபர்கள் இளைஞர்கள், முதன்மையாக முதல் முறையாக வேலை தேடுபவர்கள் என்பதைக் குறிக்கிறது. ஏறக்குறைய 12.17 […]

You May Like