fbpx

தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும்.. ஹெச். ராஜா ட்வீட்..

தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது..இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதை பழக்கம் கொலை, கொள்ளை, பாலிய தொல்லை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைகின்றது.. போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும்.. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்..

போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. போதையோடு கைகுலுக்க வேண்டாம்.. வாழ்க்கையே கை நழுவி போய்விடும்.. போதையின் பாதை அழிவு பாதை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்…. போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் பரவுவதை, விற்பனை செய்வதை, பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும்..” என்று தெரிவித்தார்..

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ போதை பொருட்களை ஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர் தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

அதிக போதை தருவது மதுபானம் என்பது முதல்வருக்கு தெரியாதா..? முதலில் மதுபானக் கடைகளை மூடுங்கள்..! - அண்ணாமலை

Fri Aug 12 , 2022
போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக முதல்வா் கூறியுள்ளாா். ஆனால், முதல்வருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய […]

You May Like