வரும் 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா பதவி ஏற்க உள்ளார்.
தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வரின் மற்றொரு பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்தார்.
மே 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் அமைச்சராக பதவியேற்பு விழா நடைபெறும் என நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமைச்சர்களில் ஒரு பகுதியினரின் இலாகாக்கள் மாற்றம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது.
மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும் மற்றும் எஸ்.ரகுபதி தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.