fbpx

வெறும் ரூ.500இல் ஆரம்பித்து லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! குழந்தைகளுக்கான இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானது. ஓரளவு அதிக வட்டி அளிக்கக் கூடியதுமாகும். தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை வழங்குகின்றன. அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை. அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் ஒன்றுதான் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்.

பெண் குழந்தைகளுக்கு சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதை போலவே, ஆண் குழந்தைகளுக்கும் செல்வ மகன் சேமிப்பு திட்டம் அமலில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இந்த சிறுசேமிப்பு கணக்கை எப்படி துவங்குவது தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அதாவது, தலைமை-துணை அஞ்சலகங்களில் மட்டுமே கணக்கை தொடங்க முடியும். தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்களும், சென்னை மண்டலத்தில் 600-க்கும் மேற்பட்ட தலைமை-துணை அஞ்சலகங்கள் இருப்பதால், எளிதாகவே இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500 இருக்க வேண்டும். கணக்கு திறக்கப்பட்டதுமே, குழந்தைக்கு பாஸ்புக் வந்துவிடும். 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கைத் திறக்கலாம். இதுவே 10 வயதை பூர்த்திச் செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இத்திட்டத்தில் இணையலாம். முதலில் பாதுகாவலர் உதவியுடன் கணக்கை துவங்கி, குழந்தைக்கு 10 வயதான பிறகு, குழந்தையின் பெயரிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். ஆண்டு வட்டியாக 8.5 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும், முதலீடு செய்த தொகையை படிப்பு செலவு அல்லது பிற செலவுகளுக்காக கணக்கு துவங்கப்பட்ட 15 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். சம்பாதித்த வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும். முதிர்வு காலத்துக்குப் பின்பும் கணக்கு முடிக்கும் வரை உங்களுக்கு பிபிஎஃப் வட்டியே வழங்கப்படும். மொத்தத்தில், இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Chella

Next Post

”என் ஜாதிக்காரர்களும் இதை அனுபவிக்கிறார்கள்”..!! ”ரொம்ப அவமானமா இருக்கு”..!! கோபி எடுத்த திடீர் முடிவு..!!

Wed Sep 20 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லத்தனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சதீஷ் (கோபி). இவர், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ்க்கு ரசிகர்கள் […]

You May Like