fbpx

இன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பம்..!! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்..!! பிரதீப் ஜான் பரபரப்பு தகவல்..!!

சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் இன்றிரவு முதல் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழப்பதால், கடலோரப் பகுதிகளைத் தவிர உள் தமிழகம், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை டெல்டா பகுதிக்கு அருகில் உள்ளதை பார்க்க முடிகிறது. புதுச்சேரி – கடலூர் – மயிலாடுதுறை பகுதிகளில் காற்று மொத்தமாகக் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் மிக கனமழை பெய்திருக்கிறது..

காற்றின் குவிதல் கடலோரப் பகுதிகளைக் கடந்து, உள் தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் இன்றிரவு முதல் ஓரிரு இடங்களில் மழை பெய்யத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இணையத்தில் லீக்கான டிக்டாக் பிரபலத்தின் அந்தரங்க வீடியோ..!! சோசியல் மீடியாவுக்கு முழுக்கு போட்டு கிளம்பிய இம்ஷா ரஹ்மான்..!!

English Summary

According to private meteorologist Pradeep John, rains will start from tonight in its suburban districts including Chennai.

Chella

Next Post

பெட்ரோல் டேங்க் ஏன் கார்களின் இடது பக்கத்தில் வைக்கப்படுகிறது? காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..

Wed Nov 13 , 2024
Why is the petrol tank placed on the left side of cars?

You May Like