fbpx

இன்று காலை 10 மணி முதல் தொடக்கம்..! பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் டிக்கெட்…

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோயில் இணையதள முகவரியில் இன்று காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் பக்தர்களை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் பக்தர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி வேண்டும் என்றும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

Kathir

Next Post

’கூகுள் பே, ஃபோன் பே’ பயனர்களுக்கு நிம்மதியான செய்தி..!! 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு..!!

Sun Dec 4 , 2022
யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், […]

You May Like