இந்திய ரிசர்வ் வங்கி (State Bank of India -SBI) சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer – SCO) காலிபணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
காலி பணியிடங்களின் விவரம் :
1. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்) : 42 பணியிடங்கள்,
2. உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்) : 25 பணியிடங்கள்,
3. உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு) : 101 பணியிடங்கள்,
4. உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்) : 1 இடம்
விண்ணப்பிப்பதற்கான தகுதி : குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கட்டிடங்கள், சோதனைப் பொருட்கள் அல்லது திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்) : குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யுபிஎஸ், ஜெனரேட்டர்கள், லிஃப்ட் போன்ற மின் சாதனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய துறை சார்ந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு) : தீயணைப்பு பொறியியல் அல்லது அதற்கு ஈடான பட்டம் பெற்றிருத்தல் அவசியம். தீ பாதுகாப்பு அல்லது தீயணைப்புப் பணிகளில் 2- 3 வருட அனுபவம் வேண்டும்.
சம்பள விவரம் : ரூ.48480 முதல் 85920 வரை
விண்ணப்பக் கட்டணம் : பொது/ பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி – ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி? புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனில் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-19/apply/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.
Read more ; இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறைய என்ன காரணம்..? ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!