தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை தொடா்பான கருத்துக்களை வரும் செப். 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கல்விக் கொள்கை உயா்நிலைக் குழுவின் தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்துக்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகளை பெறுவதற்கு உயா்நிலைக் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சாா்ந்தவா்கள் ஆகியோர்களிடம் கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பான கருத்துக்களை வரும் செப். 15ஆம் தேதிக்குள் மின்னஞ்சலுக்கும், 3ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025′ என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். மேலும், மாநிலக் கொள்கையை வகுப்பது தொடா்பாக நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, சேலம், வேலூா், சென்னை ஆகிய 8 இடங்களில் மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்படவுள்ன”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.