fbpx

”அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”..!! விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயலின் புகைப்படங்கள்..!!

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயல் தொடர்பான புகைப்படங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி வீரர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல், வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது, குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

”அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”..!! விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயலின் புகைப்படங்கள்..!!

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (uae) முதல் இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தான் அல்நெயாடி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயல் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். நான் ஏற்கனவே உறுதியளித்தபடி பிபர்ஜாய் புயல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு நாட்களில் கிளிக் செய்ததாக அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பூமியில் உள்ள வானிலை நிபுணர்களுக்கு உதவும் என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் சுல்தான் அல்நெயாடி கூறியுள்ளார்.

Chella

Next Post

”திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Thu Jun 15 , 2023
திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், வழக்கமாக நான் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் பற்றிப் […]

You May Like