fbpx

மக்களே பாதுகாப்பா இருங்க..!! அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல்..!! குழந்தைகள், முதியவர்கள் ஜாக்கிரதை..!!

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 50-ஆக இருந்தது. அது தற்போது 100 வரை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃப்ளூ வைரஸ் பரவ காரணமாக அமைந்துள்ளன. குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.

ஃப்ளூ வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் மட்டும் இருந்து ஆரோக்கியமாக இருப்பவர்கள், அறிகுறிகளோடு இணைநோய்கள் இருப்பவர்கள், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, ஆக்சிஜன் அளவு குறைவு, ரத்த அழுத்தம் குறைவு உள்ளிட்ட பாதிப்புகளோடு இருப்பவர்கள் என நோயாளிகளை 3 வகையாக பிரிக்கிறோம். இதில், 3-வது பிரிவினரை மட்டும் மருத்துவமனைகளில் அனுமதித்தால் போதுமானது. சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும்போதும், தும்மும்போது மற்றவருக்கு பரவுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி இருக்கும். இது நீடிக்கும்போது இருமல் வரும். பொதுவாக 7 நாட்களில் இந்த பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். எனவே, பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று, பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை என்ன?

குடிநீரை வெறுமனே சூடு செய்து பருகக்கூடாது. நன்றாக கொதிக்க வைத்து ஆறிய குடிநீரைத்தான் பருக வேண்டும். அப்போதுதான் கிருமிகள் அழியும். தொண்டையில் கரகரப்பு போன்ற அறிகுறி இருந்தால், கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். ஒருநாளைக்கு 3 முறை இவ்வாறு செய்யலாம். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்புபோட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். உடலுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Chella

Next Post

அரசு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கான தேர்வு..!! வெளியானது ஹால் டிக்கெட்..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?

Wed Nov 15 , 2023
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் பதவிக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கும் நவ.19ஆம் தேதி […]

You May Like