fbpx

மக்களே பாதுகாப்பா இருங்க..!! இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று (நவம்பர் 22) முதல் நாளை மறுதினம் (நவ.24) வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை என்பதால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை இந்த பகுதிகளில் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவ.23) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

வாடிக்கையாளர்களே லிஸ்ட் வந்தாச்சு..!! டிசம்பரில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

Wed Nov 22 , 2023
பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். அந்தவகையில், டிசம்பர் மாதத்தில் சுமார் 18 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல் : டிசம்பர் 1 – வெள்ளிக்கிழமை – மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, […]

You May Like