fbpx

2ஆம் தாரத்து பிள்ளைக்கு சொத்தா.? துடிதுடிக்க கொல்லப்பட்ட சித்தி.! சொத்து தகராறில் மகன் செய்த கொடூரம்.!

ராமநாதபுரத்தில், முதல் மனைவியின் மகனுக்கு சொத்துக் கொடுக்காமல், இரண்டாவது மனைவியின் மகளுக்கு சொத்துக்களை எழுதி வைக்கப் போவதாக தந்தை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன், தனது சித்தியை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான காளீஸ்வரி(60) மூலம் தங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் கடந்த 29 ஆண்டுகளாக மகேஸ்வரி(49) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு மகேஸ்வரியின் மூலம் முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், ராஜேந்திரன் தனது தனது சொத்துக்களை முதல் மனைவியின் மகனான தங்கேஸ்வரனுக்கு தரப் போவதில்லை என்றும், அதனை முழுவதுமாக இரண்டாவது மனைவியின் மகள் முத்துலட்சுமிக்கே தரப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கேஸ்வரன் கடந்த திங்கள்கிழமை, தனது சித்தி மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவிபட்டினம் காவல்துறையினர், இறந்த மகேஸ்வரியின் சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary: A son murdered his step mother over a property dispute.

Read More: “பரோட்டா சாப்பிடுவதற்கு ஒரு எம்.பி”! – ராகுல் காந்தி குறித்து கேரள ‘BJP’ விமர்சனம்.!

Next Post

'PAYTM' வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.! யுபிஐ சேவைகளுக்கு 'AXIS' வங்கியுடன் விண்ணப்பம்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

Wed Feb 21 , 2024
மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தடை விதித்திருந்தது. இந்நிலையில் பேடிஎம் (PAYTM) நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி இணைந்து, யுபிஐ கட்டணங்களை அனுமதிப்பது தொடர்பாக மூன்றாம் தரப்பு விண்ணப்ப செயலி உரிமத்திற்காக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் கூட்டு விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட், […]

You May Like