fbpx

’இனி செயலி மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை’..! – சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய செயலி உருவாக்கப்பட இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சாலை விதிகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்த உள்ளதாகவும் அதற்காக ஒரு லட்சம் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு அட்டை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் மாணவர்கள் சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்கப்படுகின்றார்களா என்பதைக் கண்காணித்து, மீறப்படும் போது என்ன தவறுகளை வாகன ஓட்டிகள் செய்கிறார்கள் என்பதைப் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிப்பிட மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் குற்றங்களைக் குறிப்பிடும் இந்த அட்டையை ஆய்வு செய்து, அந்த தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

’இனி செயலி மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை’..! - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் சாலை போக்குவரத்து அதிகரிப்பதற்குக் காரணம் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகன பெருக்கம். சாலைகள் இன்னும் அதே அளவில் இருப்பதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முடிந்த அளவுக்கு போக்குவரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்க இருக்கிறோம். அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த பகுதியில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளின் தகவல்கள் கூகுள் மேப் மூலம் கண்காணித்து, தரவுகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை காலங்களில் மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கையாள மாநகராட்சி, வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளோம். இந்த வருடம் பருவ மழைக்காலத்தைச் சிறப்பாகக் கையாள முடியும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

25 கிலோவுக்கு ஜிஎஸ்டி என்பதால்.. 26 கிலோவாக பேக்கிங் செய்யும் அரிசி வியாபாரிகள்..!!

Tue Aug 2 , 2022
25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 25 கிலோ வரையிலான பைகளில் அடைக்கப்பட்ட, அடையாளமிட்ட அல்லது […]

You May Like