fbpx

‘நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்’ – அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும், எனினும் விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், வாகனங்களின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும் எனவும், பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More:அதிர்ச்சி..!! புற்றுநோயால் தமிழ் திரைப்பட நடிகை விஜயகுமாரி மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Rupa

Next Post

அடுத்தடுத்து திருப்பம்!! பதவியேற்பு விழா தள்ளிவைப்பு!! உடனடியாக டெல்லி விரையும் சந்திரபாபு நாயுடு!!

Fri Jun 7 , 2024
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா தள்ளிப்போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. குறிப்பாக நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் […]

You May Like