fbpx

பான் கார்டை ஆதாருடன் இன்னும் இணைக்கவில்லையா?… நெருங்கிவிட்டது காலக்கெடு!… ரூ.10000 அபராதம்!

ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு, பான் கார்டை ஆதாருடன் இணைத்தால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை நாங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், ஆதார் எவ்வளவு முக்கியமானது என ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தெரியும். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நலத் திட்டங்களின் பலன்களைப் பெற, வரி செலுத்துதல், வங்கிக் கணக்கு தொடங்குதல், கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை அவசியம். ஆதார் இல்லை என்றால், இந்தியாவில் ஏதும் செய்ய முடியாது. அதனால் தான் பிறந்த குழந்தைக்கு கூட தற்போது ஆதார் கார்டு அப்ளை செய்கிறார்கள்.

ஆதார் குறித்த அப்டேட்களை நாம் தொடர்ந்து கவனித்து செய்வது நல்லது. ஆதார் அட்டை தொடர்பான அப்டேட்களை நாம் புறக்கணித்தால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பாடு. எனவே, ஆதார் குறித்த வேலைகளை உடனே செய்து முடிப்பது நல்லது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த மாதத்தில் செய்ய வேண்டிய இரண்டு கட்டாய வேலைகள் உள்ளது. அது என்ன என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 14 ஆகும். அதாவது, ஆதார் அட்டையில் உள்ள, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி ஆகியவற்றை புதுப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை. ஜூன் 14 ஆம் தேதிவரை, உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். இந்த பணியை uidai-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக அப்டேட் செய்யலாம்.

ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஆதாரில் அப்டேட் செய்பவர்களுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, ஆதார் அட்டையில் உள்ள தவறான விவரங்கள் உள்ளவர்கள் உடனடியாக ஆன்லைனில் இலவசமாக விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.இது தவிர, மற்றொரு பணியும் உள்ளது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும். இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை ஏற்படும். பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால் ஜூலை 1 முதல் பான் கார்டு செல்லாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது பிரச்சனையாக அமையும்.

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு 31 மார்ச் 2023 ஆகும். இதையடுத்து, பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. முதலீடும் செய்ய முடியாது. இதனால், பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, இந்த வேலையை உடனே செய்யவும்.அதுமட்டும் அல்ல, ஜூன் 30-க்குள் ஆதார் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ. 1000 அபராதம் கட்டவேண்டி இருக்கும். பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக உங்கள் ஆதார் எண்ணை இணைக்கவும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் பிரச்சனை இல்லை.

Kokila

Next Post

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!... ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் விலகல்!

Tue Jun 6 , 2023
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார். டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எனும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

You May Like