வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அதை இணைக்கலாம், ஆனால் அதற்கு அபராதக் கட்டணம் ரூ. 1,000. செலுத்த வேண்டும்..

பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது.. அதாவது, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் எண் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது… இந்நிலையில் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.. அதன்படி ஜூன் 30, 2023 வரை பான் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. ஜூன் 30–க்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை எனில், ஜூலை 1, 2023 முதல், பான் எண் செயலிழந்துவிடும்.. பான் எண்ணை ஆதாருடன் இணைக்க ஒருவர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். இதுவரை 51 கோடிக்கும் அதிகமான பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதார் அட்டையை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி:
எஸ்எம்எஸ் மூலம் :
- “UIDPAN என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 10 இலக்க பான் எண்ணை டைப் செய்யவும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 56161 அல்லது 567678 என்ற எண்ணுக்கு இந்த SMS அனுப்பவும்.
வருமான வரித் துறை இணையதளம் வழியாக
- www.incometaxindia.gov.in/pages/pan.aspx என்ற வருமான வரித்துறை இணையதளத்தைப் பார்வையிடவும்
- Link Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- ஆதார் மற்றும் பான் எண் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்
- பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்
- பின் “Link Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
- அதன் பிறகு உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.