fbpx

பசுக்களை கொல்லாமல் இருந்தால் பூமியில் பிரச்சனையே இருக்காது : குஜராத் நீதிமன்றம்

பசுக்களை கொல்வதை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு 16 மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக முகமது அமீன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. இந்த வழக்கு விசாரணை குஜராத் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்..

நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.. அதில் “ பசு ஒரு விலங்கு மட்டுமல்ல அது தாய். பசுவைப் போல நன்றியுணர்வு கொண்ட உயிரினம் எதுவும் இல்லை.. என்றைக்கு பசுவின் ஒரு துளி இரத்தம் பூமியில் சிந்தாமல் உள்ளதோ, அன்று பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்..

68 கோடி புண்ணிய ஸ்தலங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் கிரகத்தில் பசு வாழ்கிறது… எனவே பசுவை பாதுகாப்பது நமது கடமை. இந்தச் சூழ்நிலையில் மாடுகளை கொல்வது வேதனையும் வருத்தமும் தருகிறது. பசுவின் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவதில்லை என்று அறிவியல் நிரூபித்துள்ளது. கோமியம் பல தீராத நோய்களுக்கு மருந்தாகும். பசு மதத்தின் சின்னம்

தற்போதைய நிலையைப் பார்த்தால், 75 விழுக்காடு பசுக்கள் அழிந்து விட்டது என்பது தெளிவாகத் தெரியும். இப்போது 25 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது. மக்கள் பசுக்களை மறக்கும் நிலை ஏற்படலாம்.. நாம் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. பசுக்கள் கொல்லப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை ஆனால் உச்சக்கட்டத்தை எட்டுகிறது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்..

Maha

Next Post

#திண்டுக்கல்: நாயைப் பேர் சொல்லி அழைக்காததால் ஏற்பட்ட விபரீதம்.. மரணத்தில் முடிந்த வாக்குவாதம்..!

Mon Jan 23 , 2023
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள தாடிக்கொம்பில் 65 வயது விவசாயியான ராயப்பனுக்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் மற்றும் வின்சென்ட் வளர்த்து வந்த நாய்களுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.  இதற்கிடையில், டேனியல் மற்றும் வின்சென்ட் ஆகியோரின் செல்ல நாய் வழிப்போக்கர்களை பார்த்து அடிக்கடி குறைத்தும், கடிப்பது போலவும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை பற்றி பலமுறை ராயப்பனிடம் புகார் அளித்து வந்துள்ளார். ஒருநாள் ராயப்பன் பக்கத்து வீட்டு நாய்களை பெயர் […]

You May Like