fbpx

நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம்..!! இயக்குனர் சேரன் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!!

தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் பயணித்திக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பஸ்சை வேகமாக இயக்கியதோடு, ஹாரன் அடித்தபடி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி, கீழே இறங்கி, பஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்ம் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுளது. அந்த புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் பலரும் பேருந்து ஓட்டுநர் மீதே தவறு என்று கூறியுள்ளார். தொடர்ந்து ஹாரன் அடித்தபடி பேருந்தை வேகமாக இயக்கியது பஸ் ஓட்டுநரின் தவறு தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : ஜப்பானை அடுத்த வாரம் அழிக்கப் போகும் மெகா நிலநடுக்கம்..? 5 நிமிடங்களில் மொத்தமும் முடிஞ்சிரும்..!! மக்களுக்கு எச்சரிக்கை..!!

English Summary

A police complaint has been filed against director Cheran who had an argument with a private bus driver.

Chella

Next Post

தாய்லாந்து அரசியல் குழப்பம்.. முன்னாள் பிரதமரின் மகள் பிரதமர் பதவிக்கு பரிந்துரை..!!

Thu Aug 15 , 2024
Thailand political turmoil: Ex-Prime Minister's daughter likely to be nominated as new Thai Premier

You May Like