fbpx

புயல் எதிரொலி..!! இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.7) விடுமுறை..!!

மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. நேற்று சென்னையில் மழையின் அளவு குறைந்த போதும் முதல் நாள் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் நீர் குளம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

தீவிர மழைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை டிசம்பர் 7ஆம் தேதி 6 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம்போல் நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

’சென்னை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்திடுக’..!! நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை..!!

Wed Dec 6 , 2023
சென்னையில் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தினங்களாக இரவு பகல் பாராமல் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் நின்று மீட்பு […]

You May Like