திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகியதை தொடர்ந்து, கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிக்ஜாம் புயலினுடைய தாக்கம் சென்னை விட திருவள்ளூர் மாவட்டத்திற்கு சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 21 செண்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.