fbpx

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘ரிமா’ புயல்!! 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நகர்ந்து வந்து இன்று மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கிறது.

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 23ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றத்தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மாலை 5:30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டது. இது வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தெற்கே சுமார் 650 கி.மீ, தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 620 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தெற்கே 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் நாளை நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த புயலானது கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110-120 வேகத்திலும், இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More: ஆன்லைன் காதல்.. ’46 வயது இளைய நபரை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்மணி..!’ டேட்டிங் ஆப் மோசடி குறித்து எச்சரிக்கை பதிவு!

Rupa

Next Post

புது வீடு கட்டப்போறீங்களா? இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது அவசியம்!!

Sat May 25 , 2024
வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் சில பிரச்னைகள் சிக்கல்கள் ஏற்படுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.அவை என்னென்ன வாஸ்து சாஸ்திரங்கள் என்பது […]

You May Like