fbpx

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! பாதுகாப்பா இருங்க..!! வெளியான எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான அதே இடத்தில் நிலவுவதால், தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, நாகை, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் கடல் சீற்றம் காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூரில் உள்ள தாழங்குடா பகுதியில் வழக்கத்தைவிட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தாழங்குடா கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 3ஆவது நாளாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Chella

Next Post

சிக்ஸர் மழை..!! உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த ரோகித் ஷர்மா..!!

Wed Nov 15 , 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் கேப்டன் ரோகித் ஷர்மா. இன்றைய போட்டியில் உலகக் கோப்பை தொடரில் 50 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. […]

You May Like