fbpx

அசத்தல் அறிவிப்பு..! இம்மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவை அறிமுகம்..! – சிஇஓ கோபால் விட்டல்

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவன சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்றன. மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே அதிக அலைக்கற்றைகளை கைப்பற்றி உள்ளது. மொத்தமாக 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ ஏலம் எடுத்துள்ளது.

அசத்தல் அறிவிப்பு..! இம்மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவை அறிமுகம்..! - சிஇஓ கோபால் விட்டல்

அதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய்க்கும், வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடி ரூபாய்க்கும், அதானியின் நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் 5ஜி அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளது. ஏலத்தில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை துவங்கும் பணிகளை துவங்கிய நிலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் இந்த 5ஜி சேவையில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் துவங்கும் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

அசத்தல் அறிவிப்பு..! இம்மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவை அறிமுகம்..! - சிஇஓ கோபால் விட்டல்

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் இந்த மாதத்தில் தாங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து கிராமப்புறங்களுக்கும் 5ஜி சேவையை கிடைக்கச் செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் இரு நிறுவனங்களில் யார் முதலில் 5ஜி சேவையை துவக்குவார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

Chella

Next Post

’2024-க்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்’..! பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி..!

Wed Aug 10 , 2022
2024-க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள நிதிஷ் குமார், பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். பீகாரில் பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 8-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத் […]
’2024-க்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்’..! பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி..!

You May Like