fbpx

’வலுவடைந்தது’..!! தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை..!! வானிலை மையம் அலெர்ட்..!!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்து இருப்பதாகவும், வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (செப்.13) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை (செப்.15) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செப்.16, 17ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செப்.18, 19, 20ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அமைச்சர் பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்..!! வழக்கில் இருந்து விலக முடியாது..!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி..!!

Thu Sep 14 , 2023
அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் இருந்து விலக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்து விட்டார். கடந்த 1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் […]

You May Like