தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரையும் விட்டு வைக்காமல் துரத்தக்கூடிய ஒரு கொடிய நோய் தான் சர்க்கரை நோய். தற்போது இளம் வயதினரை கூட இந்த நோய் விட்டு வைப்பதில்லை. 35 வயதை தொட்டுவிட்டாலே சர்க்கரை நோய் வந்து விடுமோ என்ற பயம் அனைவரிடமும் வந்துவிடும். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
இருப்பினும் உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய பங்குகள் வகிக்கின்றன. நமது நாட்டில் சர்க்கரை நோய் விகிதம் அதிகரித்து வருவதற்கு உணவு பழக்க வழக்கம், உடல் பருமன் போன்றவை காரணமாக அமைகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இல்லையெனில் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். இது அதிகரித்த ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சர்க்கரை நோய் இருந்தால் உங்கள் உணவில் தினை மாவை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீரழிவு நோய் ஏற்படுவதை தடுக்க உதவும் தினை மாவை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ராகி மாவில் பாலித்தீனால்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குறைந்த கிளிசமிக் குறையீட்டை கொண்டுள்ளதோடு முழுக்க முழுக்க நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை நிறைந்த உணவாக அமைகிறது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More : பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்..!! காரணம் தெரிஞ்சா ஆடிப்போவீங்க..!! ஏன் தெரியுமா..?