fbpx

மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை அதிகரிக்கும்..! கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

வேலைபளு, உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது.

மனஅழுத்தம் மிக கொடியது. யாரிடமும் பேசத்தோன்றாது.எதை பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிது அல்ல. ஆனால், மனஅழுத்தம் குறித்த அறிகுறிகள் என்ன, எப்படி விழிப்போடு இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வது மிக அவசியம்.

ஒருவர் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் போது வழக்கத்தை விட அதிகமாக எரிச்சலடைவார்கள்.சிறிய விஷயங்களுக்காகவும் அதிகமாக கோபப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதே காரணம். இவ்வாறு உணர்ந்தால் எல்லாவற்றிலும் பொறுமையாக செயல்பட ஆரம்பியுங்கள். கோபம் வரும் நேரங்களில் மூச்சை ஒரு முறை ஆழமாக உள்ளெடுத்து ஒரு சில விநாடிகள் நிறுத்தி வைத்து பின்னர் வெளிவிடுவது உடனடியாக தீ்ர்வு கொடுக்கும்.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது அன்றாட வேலைகளில் கூட சரிவர கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். சிறிய விஷயம் கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அவ்வாறான நிலையில் நீங்கள் இருந்தால் போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு வேலைகளை ஒட்டுமொத்தமாக பார்க்காமல் தற்போது செய்யும் வேலையில் மாத்திரம் கவனம் செலுத்த முயற்சி செயய்யுங்கள்.இரவில் தூக்கமின்மை மற்றும் காலையில் அதிக தூக்க உணர்வு ஏற்படுவதற்கும் மன அழுத்தமே காரணம். சிலர் இரவு மற்றும் பகல் என நாள் முழுவதும் தூங்குவதை மட்டுமே விரும்புவார்கள். இது மன ரீதியாக ஒருவர் போராடுகின்றார் என்பதையே குறிக்கின்றது.

இவ்வாறு உணர்ந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஈடுபாடு காட்ட ஆரம்பிக்க வேண்டும். ஏதாவது இசை கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது, புத்தகம் வாசிப்பது, நல்ல பாடல்களை கேட்பது போன்றவற்றை சிறிது காலம் எண்ணங்களை திசை திருப்ப வேண்டும்.மன அழுத்தம் தீவிரம் அடையும் போது உடல் சார்ந்த சோர்வாக மாறும். அதிக தலைவலி, அதிக அழுகை, அதிக உடல் வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதுபோன்று உணர்ந்தால் உடல் சார்ந்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.மன அழுத்தம் அதிகரிக்கும் போது யாரிடமும் பேச பிடிக்காது. யாரை பார்த்தாலும் காரணம் இல்லாமல் கோபம் ஏற்படும்.தனிமையில் இருப்பதை மட்டும் மனம் விரும்பும் ஆனால் தனிமையை நினைத்தும் கவலை ஏற்படும் இவ்வாறான எண்ணங்கள் ஏற்படுவது மன அழுத்தத்தின் தீவிர தனிமையை குறிக்கின்றது.

இதனை புறக்கணித்தால் தற்கொலை எண்ணங்கள் கூட ஏற்பட ஆரம்பிக்கும். இவ்வாறான நிலையை உணர்ந்தால் நண்பர்களுடன் இல்லது உறவுகளுடன் பேசுவதை தவிர்க்க கூடாது.முடிந்தவரை வீட்டில் இருப்பதை தவிர்த்துக்கொண்டு இயற்கை எழில் நிறைந்த இடங்களை பார்க்க வெளியில் செல்வது தூர பயணம் செல்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது சிறந்த தீர்வை கொடுக்கும்.

Read More: சிக்கன் ரைஸில் விஷம்: தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழப்பு..! நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

Rupa

Next Post

இந்து சமய அறநிலையத்துறை வேலை..!! அப்ளை பண்ண நீங்க ரெடியா..? விவரம் உள்ளே..!!

Tue May 7 , 2024
இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1 பதவி: உதவி ஆணையர் காலிப்பணியிடங்கள்: 21 வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும். தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் சட்டப்பிரிவில் 3 ஆண்டு இளங்கலை அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்திருக்க […]

You May Like