fbpx

Nude Boat: மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம்!… விதிமுறைகளையும் வகுத்த தனியார் நிறுவனம்!

Nude Boat: மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று, நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மனிதர்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, நடனம், பயணம் மற்றும் பிற செயல்பாடுகளில் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள். அந்தவகையில், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று, நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸை தளமாகக் கொண்ட நிறுவனமான Bare Necessities, இத்தகைய விசித்திரமான நிர்வாண கப்பல் வசதியை மேற்கொண்டுள்ளது. அதாவது, மன அழுத்தத்தில் உள்ள நபர்களுக்கு ஒரு தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சியாக இதன் நோக்கம் உள்ளது. பயணிகளுக்கு அற்புதமான, மன அழுத்தமில்லாத, ஆடை இல்லாத பயண அனுபவத்தை அளிக்கும் உலகின் ஒரே கப்பல் பாதை இதுதான். 1990 ஆண்டு முதல் மக்களுக்கு இதுபோன்ற பயணங்களை வழங்கிவரும் இந்த நிறுவனம், இதற்காக 9 விதமான விதிகளையும் அந்நிறுவனம் வகுத்துள்ளது. இந்த விதிகளை மீறினால் பயணிகள் கப்பலில் இருந்து நீக்கப்படுவர்.

இதுதொடர்பாக தனது அனுபவத்தை 67 வயதான பயணி Redditல் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இந்த நிர்வாண கப்பல் பயணம் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த கப்பலில் கேப்டனின் அனுமதிக்கு பிறகே பயணிகள் ஆடை இல்லாமல் உலாவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படும் போது அனைவரும் முழு ஆடை அணிந்திருக்க வேண்டும். சாப்பாடு அறையில் கூட பயணிகள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

எப்போதும் உட்கார்ந்து, ஒரு சிறிய துணியால் உடலை மூடி கொள்ளவும். மற்ற பயணிகளை அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது. எல்லோர் முன்னிலையிலும் காதல் செய்தல், காதல் எண்ணத்தில் மற்றவர்களை தொடுதல் கூடாது. ஆபத்தான அல்லது முரட்டுத்தனமான நடத்தை கூடாது. சட்டவிரோத பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Readmore: வங்கி வாடிக்கையாளர்களே!… இனிமேல் எல்லாம் உங்கள் விருப்பம்தான்!… RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Kokila

Next Post

Good News: வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு...! மத்திய அரசு ஒப்புதல்...!

Sat Mar 9 , 2024
வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல். வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல். ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்து. 2022 நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும். நாடு முழுவதும் சுமார் 8 […]

You May Like