fbpx

ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை..!! அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை..!!

ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், அனைத்து முகவர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பால் விநியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இன்று காலை அனைத்து முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார். மேலும், ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவைக்கேற்றவாறு மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது.

Chella

Next Post

பெண்களே..!! ரூ.6,000 நிதியுதவி திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?

Thu Dec 7 , 2023
நாட்டு மக்களின் நலனுக்காக அரசு ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்போது பெண்களுக்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY). இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் விவரங்கள் என்ன? தகுதியுள்ள பெண்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். […]

You May Like