fbpx

இந்த நாணயத்தை வாங்க மறுத்தால் சட்டப்படி குற்றம்…! உடனே நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு…!

10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10, 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்துகள் போன்ற இடங்களில் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. 10,20 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் ஓகே பலமுறை விளக்கம் அளித்துள்ளது.

10 மற்றும் 20 நாணயங்களை வியாபாரிகள் ஓட்டுநர்கள் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டும். ஏற்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் அதிரடி கைது...! தலைவர்கள் கண்டனம்...!

Mon Feb 27 , 2023
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் […]

You May Like