fbpx

பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு..? இம்முறை எவ்வளவு மணி நேரம் வெடிக்கலாம்..?

அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வரும் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது.

பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்..? இம்முறை எவ்வளவு மணி நேரம் வெடிக்கலாம்..?

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்படும்.

Chella

Next Post

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை .. அமைச்சரவை ஒப்புதல்…

Mon Sep 26 , 2022
ஆன்லைன் சூதாட்டத்திற்குதடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலங்களில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். இதன் விளைவாக தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன. இது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எத்தனையோ செய்திகள் வந்த போதிலும் தற்கொலைகளை தடுக்கமுடியவில்லை. இந்நியைில் ரம்மி செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ரம்மி தடை செய்வது தொடர்பாக நீதிபதி சந்த்ரு  தலைமையில் குழு […]

You May Like