பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளில் நடத்தப்படும் இந்த சீசனில், கேப்டனை இம்பிரஸ் பண்ணாத போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் மாயா, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஐஷூ, பிரதீப் ஆண்டனி ஆகியோர் சுமால் பாஸ் வீட்டில் உள்ளனர். விதிப்படி அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணவு சமைத்துக் கொடுக்க முடியாது என கூறி சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நடத்திய போராட்டத்தை கமல்ஹாசன் இன்று கண்டித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள ப்ரோமோவில் கமல் கூறியதாவது : “ஒரு புரட்சி போராட்டம் செஞ்சிங்க. தண்ணிய கூட கொடுக்காம இருந்ததை ஸ்டிரைக்னு சொல்ல முடியாது. ஸ்டிரைக் பண்ணியது நியாயமா, நியாயமில்லையாங்குறது கேள்வியல்ல. நியாயத்துக்காக தான் நீங்க ஸ்டிரைக் பண்றீங்க. அதுல ஒரு நியாயம் இருக்க வேண்டாமா? என கமல்ஹாசன் அவர்களை விளாசியுள்ளனர்.